பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி… மார்க் ஸூக்கர்பர்க்கின் தற்போதைய நிலை

0
104

பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி… மார்க் ஸூக்கர்பர்க்கின் தற்போதைய நிலை

தனது சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக வீழ்ந்ததை அடுத்து மார்க் ஸூக்கர்பெர்க் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் இருந்து வெளியேறியுள்ளார்.

மெட்டா (பேஸ்புக்கின் தாய் நிறுவனம்) நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் தற்போது இல்லை. 2021 இல் $97 பில்லியனில் இருந்து 2022 இல் $67.3 பில்லியனாக அவரது நிகர மதிப்பு கணிசமாகக் குறைந்ததால் CEO அந்த இடத்தை இழந்தார். இதை புகழ்பெற்ற போர்ப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

2015-க்குப் பிறகு முதல் முறையாக அவர் அந்த இடத்தை இழந்தார். கடந்த ஆண்டில் ஜுக்கர்பெர்க் அளவுக்கு நிகர மதிப்பை எந்த அமெரிக்கரும் இழந்ததில்லை. கடந்த சில மாதங்களாக தொழில்நுட்ப பங்குகள் குறைந்து வருகின்றன என்றாலும், மெட்டாவின் வீழ்ச்சி அதிகளவில் உள்ளது.

சீனாவின் மற்றொரு சமூகவலைதளமாக டிக் டாக் பேஸ்புக்குக்கு கடுமையான போட்டியாக உள்ளது. 2000க்கு பிந்தைய தலைமுறையினர் வீடியோ செயலியான டிக் டாக்கை அதிகமாக விரும்புகின்றனர். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் பேஸ்புக் மாதாந்திர பயனர்களின் வீழ்ச்சியைக் காண்கிறது. அதுவே மார்க்கின் சொத்து மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

உலகின் மிக இளம் வயது பணக்காரர்களில் ஒருவராக இருந்து வந்த மார்க் ஸூக்கர் பெர்க் கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறார்.