தெரிந்துக்கொள்ளுங்கள்!! பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!!

0
94

தெரிந்துக்கொள்ளுங்கள்!! பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!!

வெறும் அரிசி சாதத்தை சாப்பிட்டால் எடை அதிகரித்து விடும் எனவே அரிசி சாதம் , இட்லி ,தோசை போன்றவற்றை நிறுத்திவிட்டு சப்பாத்தி ,ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள் என்று நிறைய பேர் கூறுகின்றனர். இதையும் நம்பி சில பேர் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து அரிசி சாதத்தை தவிர்த்து விடுகின்றன.கேழ்வரகு, திணை, சாமை போன்றே அரிசியும் நம் பாரம்பரிய உணவாகும்.அக்காலத்தில் எல்லா சிறு தானியங்களையும் இயற்கை முறையில் பயிரிட்டு உணவாக உண்டனர். ஆனால் இக்காலகட்டத்தில் ஆறு மாத பயிர் மூன்றே மாதத்தில் அறுவடை செய்யும்படி பல செயற்கை உரங்களை விதைத்துவிட்டு விஷ பயிராக மாற்றிவிட்டு கடைசியில் அரிசி சாதம் உண்டால் சர்க்கரை நோய் வரும் எடை அதிகரிக்கும் என்று மேனாட்டு பாரம்பரியத்தில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். இயற்கையாக கிடைக்கும் எந்த ஒரு உணவிலும் சில சத்துக்கள் உள்ளன. அதனை முறையாக பயன்படுத்தி உண்டாலே இயற்கை மருந்தாகும்.

சாதத்தை உண்ணும்போது சில சூட்சுமங்களை பயன்படுத்தினால் உங்கள் உடலை பல நோய்களிலிருந்து உங்களை பல நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பை போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் போன்றவற்றை குணப்படுத்தும். இதே கஞ்சியை சூடு ஆறிப் போய் குறித்தால் வாயுவை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை பிரச்சனை நீங்கும்.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது மோரை ஊற்றி சாப்பிட வேண்டும் இது தான் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

கொதிக்க கொதிக்க சாதத்தை சாப்பிட கூடாது. ஆனால் மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம் மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

சோறு வெதுவெதுப்பாக இருப்பின் பசும்பால் ஊற்றி சாப்பிட பித்தம், தண்ணீர் தாகம் அதிகம் ஏற்படுவது நீங்கும்.

முதல் நாள் சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது அல்லது கரைச்சி குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன் வயிற்றுக்கோளாறு ,அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்து சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

சம்பா சோறு வயிறு கோளாறுக்கு மிகவும் நல்லது.

மோர் சாதம் செரிமான கோளாறுகளை நீக்கி பித்ததை தணிக்கிறது.

அரிசி சாதத்தை வாழை இலையில் சாப்பிடுவதால் அதில் உள்ள துவர்ப்புச் சத்து உடலில் பல நன்மைகளை ஏற்படுத்துகிறது.வாரத்திற்கு ஒரு முறையாவது வாழையிலையில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

author avatar
Pavithra