‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
217
#image_title

‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் வரும் கோமாளிகள் செய்யும் நகைச்சுவைகளுக்காகவே பலரும் இந்த நிகழச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர். முதல் 3 சீனனுமே மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது 4வது சீசன் ஓளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் கடந்த 3 சீசன்களாக கோமாளியாக கலக்கிய மணிமேகலை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த வார எபிசோடில் நானே வருவேன் கெட்டப்பில் இருந்த அவர் நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் இன்று என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019ம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் மிகுந்த அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். குக் வித் கோமாளியில் உங்களை கொஞ்சமாவது மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனிமேலும் உங்கள் அன்பை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை மணிமேகலை கூறவில்லை.

author avatar
Parthipan K