மங்களூரு குக்கர் குண்டு! குற்றவாளியிடம் காவல்துறையினர் 4 மணி நேர கிடக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்த பல திடுக்கிடும் உண்மைகள்!

0
132

கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் பம்ப்வெல் என்ற பகுதியில் கடந்த 19ஆம் தேதி தீர்த்தஹள்ளியை சார்ந்த முகமது ஷாரிக் என்பவர் ஆட்டோவில் குக்கர் குண்டு எடுத்துச் சென்றபோது அது வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம், ஷாரிக் உள்ளிட்ட இருவரும் படுகாயம் அடைந்து மங்களூரு பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் ஷாரிக்கிற்க்கு 45 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் பேச முடியாமலும், கண்ணை திறக்க முடியாமலும் இருந்து வந்தார். அவருடைய நுரையீரலில் புகை சேர்ந்து கொண்டதால் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். 8 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து அவருடைய உடல்நலம் தேடி வருகிறது தற்சமயம் அவர் பேசும் நிலையில் இருக்கிறார். இதனை தொடர்ந்து மங்களூரு காவல்துறை ஆணையர் சசிகுமார் தலைமையில் நேற்று முன்தினம் 2 மணி நேரமும் நேற்று 4 மணி நேரமும் விசாரணை நடைபெற்றது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது ஷாரிக் கைபேசி கடையில் வேலை செய்ததால் ஏகப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் கைப்பேசி எண்கள் அவருக்கு கிடைத்திருக்கின்றன. இதனை வைத்து ஷாரிக் அவர்களுடன் நட்பை உண்டாக்கி இருக்கிறார்.

இவர்களில் சிலரை பிரைன் வாஷ் செய்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறார். கடலோர மாவட்டங்களில் மட்டும் 40-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி வழங்கியது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.