மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்! சிம் கார்டு வாங்க உதவி புரிந்த நபரிடம் 60 மணி நேரம் தொடர் விசாரணை!

0
144

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன. இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்கள் தாங்கி சென்றது காவல்துறையினரின் விசாரணை தெரிய வந்திருக்கிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர் தங்கி சென்ற கோவை மாவட்டத்தில்தான் சமீபத்தில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அந்த கார்வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஒரு மிகப்பெரிய திட்டத்துடன் அந்த கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திருப்பதாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே மங்களூரில் குக்கர் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றன. தமிழகத்தில் தங்கி இருந்த பகுதிகளில் யாருடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது தொடர்பாகவும் விசாரணை ஒரு புறம் நடைபெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கோவையில் 3 தினங்கள் காந்திபுரம் பகுதியில் இருக்கின்ற எம் எம் வி தங்கும் விடுதியில் முகமது ஷாரிக் தங்கி இருக்கின்றார்.

அப்போது தன்னுடைய அடையாளத்தை மாற்றிக் கொண்டு கௌரி அருண்குமார் என்ற பெயரில் போலியான கர்நாடக மாநில முகவரியை வழங்கி அவர் தங்கி சென்றிருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அவர் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்த விடுதியில் பக்கத்து அறையில் தங்கி இருந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தரிடம் நட்பான முறையில் அழகி அவருடைய ஆதார ஆவணத்தை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கி இருப்பதும் ஆனால் அந்த சிம் கார்டில் இருந்து கோவை உட்பட எந்த பகுதிக்கும் பேசவில்லை என்பதும் காவல்துறையினரின் விசாரணையும் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் மற்றொருவர் முகவரியில் சிம் கார்டை வாங்கிய அந்த நபர், கோவை உட்பட வேறு எந்த பகுதிக்கும் பேசவில்லை என்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது. அதாவது அவர் கோவையில் தங்கியிருந்து மற்றொருவர் முகவரியில் சிம் கார்டை வாங்கிக் கொண்டு பின்பு வேறு மாநிலத்திற்கோ அல்லது வேறு எங்காவது இல்லையெனில் கர்நாடகத்திலோ வந்து தாங்கிக் கொண்டு அங்கிருந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்காக அந்த சிம் கார்டை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே காவல்துறையினர் குந்தசப்பை கிராமத்தைச் சார்ந்த சுரேந்தரிடம் 60 மணி நேரம் விசாரணை நடத்தினர். 2 தினங்களாக ரகசிய இடத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று இரவு காவல்துறையினர் சுரேந்தரை அவருடைய இல்லத்தில் விடுவித்தனர்.