பெற்ற மகளையே கற்பழித்த கூலித் தொழிலாளி! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

0
71

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும்கூட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை.

ஆங்காங்கே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. இவை அனைத்தையும் மத்திய, மாநில, அரசுகள் மௌனமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் இதற்கான அதிரடி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த ரப்பர் தொழிலாளி ஒருவர் தன்னுடைய 12 வயது மகளை மிரட்டி கற்பழித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பலமுறை அவர் மானபங்கம் செய்ததால் கடந்த 2017ஆம் வருடம் அந்த சிறுமி கர்ப்பமானார் என தெரிகிறது.

அந்த சமயத்தில்தான் அவருடைய தந்தை அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது வெளியுலகத்திற்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்கள். அதோடு அந்த தொழிலாளியை கைது செய்து சிறையிலடைத்தனர், இந்த வழக்கு கேரளாவிலுள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உதயகுமார் பெற்ற மகளை மிரட்டி பலமுறை கற்பழித்த தொழிலாளிக்கு 106 வருடங்கள் சிறை தண்டனையும், 17 லட்சம் ரூபாய் அபராதமும், விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.