கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள்

0
58

கரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள்

மத்திய பிரதேசத்தில் கரண்ட் பில்லைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான வீட்டு உரிமையாளர் ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணத்தைப் பார்த்தி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவருக்கு கடந்த மாதத்தின் மின் கட்டணமாக 3,419 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த மின்கட்டணத்தை பார்த்த வீட்டின் உரிமையாளருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. முதியவர் ரத்த அழுத்தம் அதிகமாகி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த தகவல் வைரலாகப் பரவ, இதில் தவறு நடந்துள்ளதாக மின்துறையினர் அவசர அவசரமாக தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஒரு தொழிலாளியின் தவறு என்று அவர்கள் கூறுகின்றனர். உடனடியாக மீண்டும் ஒரு பில் உருவாக்கப்பட்டது. புதிய பில்லில் பிரியங்காவின் மின் கட்டணம் ரூ.1,300 என குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மின்சார போக்குவரத்து ஆணைய பொது மேலாளர் நிதின் மங்லிக் கூறியதாவது: ஊழியர் ஒருவரின் தவறால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்காக அவர்கள் வருந்துகிறார்கள். இதை செய்த தொழிலாளி கண்டுபிடிக்கப்பட்டு அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட்ட அலுவலர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.