மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!!

0
167
Mamata Banerjee should be Prime Minister!! Senior BJP leader comments!!
Mamata Banerjee should be Prime Minister!! Senior BJP leader comments!!
மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!!
மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் அவர்கள் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகின்றார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி செய்து வருகின்றது. மேற்கு வங்க மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களின் தலைமையில் சிறப்பான மாநிலமாக இருக்கின்றது. இதையடுத்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் “இந்தியப் பிரதமராக மம்தா பானர்ஜி அவர்கள் வரவேண்டும். கம்யூனிஸ்டுகளை எதிர்த்து போராடிய குணத்தை பார்த்தாலே மம்தா பானர்ஜி அவர்கள் எந்த அளவிற்கு தைரியமான பெண்மனி என்று தெரிகின்றது. இப்படியொரு தைரியமான பெண்மணி இந்திய நாட்டின் பிரதமராக வர வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களை பிளாக்மெயில் செய்வது சாத்தியமற்றது” என்று தெரிவித்துள்ளார்.