உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு!!

0
161
#image_title

உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு!

நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தை பற்றி புதிய தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரூப்படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை அமைத்துள்ளார். தற்பொழுது மாமன்னன் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.