உலகின் இளம் பிரதமருக்கு உலகின் மூத்த பிரதமர் கூறிய ஆலோசனை

0
81

உலகின் இளம் பிரதமருக்கு உலகின் மூத்த பிரதமர் கூறிய ஆலோசனை

பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின், உலகின் இளம் பிரதமராக கருதப்படுகிறார். 34 வயதிலேயே இவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஆண்டி ரன்னி என்பவர் சமீபத்தில் நடந்த அஞ்சல் துறை ஊழியர்களின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து அதே கட்சியைச் சேர்ந்த 34 வயது சன்னா மெரின் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். இவரை ஐந்து கூட்டணி கட்சிகள் பிரதமராக தேர்வு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உலகின் இளம் பிரதமராக பதவியேற்க உள்ள சன்ன மெரினுக்கு உலகின் மூத்த பிரதமரான மலேசிய நாட்டின் பிரதமர் மஹாதீர் முகமது ஒரு ஆலோசனை கூறியுள்ளார். மூத்தவர்களாகிய நாங்கள் இளம் வயதினர்களின் யோசனையைக் கேட்டு அவர்களுடைய ஆலோசனையை கலந்து ஒரு முடிவை எடுப்போம். அதேபோல் இளையவர்கள் மூத்தவர்களிடம் ஆலோசனை செய்து அவர்களுடைய கருத்தை கேட்டு ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் இளம் வயதினர் மற்றும் மூத்த வயதினர்கள் இணையும் கூட்டணி தான் மிகச்சிறந்த கூட்டணியாக அமையும் என்றும் கூறியுள்ளார்

உலகின் இளம் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னாமெரின் தனது அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே உலகின் மூத்த பிரதமரான மலேசிய பிரதமரின் ஆலோசனை என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk