மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்!

0
88

மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்!

மலேசிய அரண்மனையில் ஊழியர்களாக பணிபுரியும் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மலேசிய மன்னர் மற்றும் ராணியை தனிமைப்படுத்தி தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைத்துள்ளனர்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா தொற்றுக் கிருமி உலக நாடுகளில் பரவி இதுவரை 22,000 பேருக்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. உலகில் முன்னேறிய நாடுகளான சைனா, இத்தாலி, அமெரிக்கா, வடகொரியா போன்ற நாடுகளில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் மலேசியா நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இதுவரை 2,031 பேர் கொரோனா தொற்றினால் பாதித்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மலேசிய மன்னரின் அரண்மனையில் பணிபுரியும் வேலையாட்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசிய அரண்மனை அறிக்கை வெளியிட்டு, அதில் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்று அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆபத்தான சூழலில் மலேசிய மன்னர்
“கிங் சுல்தான் அப்துல்லா’வுக்கும் மற்றும் மலேசிய ராணி “துங்கு அஸிசா அமினா மைமுனா’வுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. பின்னர் பாதுகாப்பு கருதி இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க 2 வாரத்திற்கு தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Jayachandiran