வாக்குறுதியை நிறைவேற்றால் விட்டால் பதவி எதற்கு கமல்ஹாசன் அதிரடி!

0
97

மக்கள் நீதி மையத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால், அவர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் என்று கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மதுரை போன்ற தென்மாவட்டங்களில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அதன்பிறகு இல்லத்தரசிகளுக்கு ஊதியம், ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட், ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவது, போன்ற பல வாக்குறுதிகளை அளித்து வருகின்றார் கமல்ஹாசன்.

இந்த நிலையிலே, தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கமல்ஹாசன் நேற்றைய தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். பாப்பாரப்பட்டியில் ஒன்று கூடிய பொதுமக்கள் இடையே உரையாற்றிய கமல்ஹாசன், சினிமாக்காரனுக்கு கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்று தெரிவிக்கிறார்கள். அதை நிராகரித்து காட்டுங்கள் நான் இங்கே பார்க்கும் முகங்கள் எல்லாம் நாளை நமதே, நாளை நமதே, என்று தெரிவிக்கிறது என்று தெரிவித்தார்

தமிழ்நாட்டில் சீரமைக்க வரலாறு உங்களுக்கு கொடுத்திருக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பு இதுதான் என்று தெரிவித்தார். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இது இளைஞர்களுடைய, மற்றும் பெண்களுடைய கட்சி மாண்புமிகு என்ற பெயருக்காக அரசியலுக்கு நான் வரவில்லை மக்கள் ஊழியர்கள் என்ற அடிப்படையிலேயே வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அதோடு, நாங்கள் அறிவிக்கும் வேட்பாளரை நீங்கள் வெற்றியடைய செய்த பிறகு அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அவர்கள் ராஜினாமா கடிதம் என்னிடம் இருக்கின்றது. அவர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் என்றும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.