Connect with us

Breaking News

இந்த இணைப்பை உடனே மேற்கொள்ளுங்கள்! இல்லையெனில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் அட்டை செல்லாது!

Published

on

Make this connection now! Otherwise the PAN card will be invalid from 1st April!

இந்த இணைப்பை உடனே மேற்கொள்ளுங்கள்! இல்லையெனில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பான் அட்டை செல்லாது!

தற்போது மாறிவரும் காலகட்டத்தில் ஆதார் என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. அதனால் ஆதாரை பான் கார்டு, வங்கி கணக்கு, மின் இணைப்பு அட்டை, ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement

அந்த அறிவிப்பில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒருவர் தன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்திருக்க  வேண்டும். அந்த இணைப்பை மேற்கொள்ளவில்லை என்றால் பான் கார்டு செயல் இழந்து விடும். அதனால் உடனடியாக பான்  ஆதார் இணைப்பது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளது. அதனால் வருமான வரியின் இ பைலிங் போர்ட்டலான https:/icometaxindiaefiling.gov.in/ திறக்க வேண்டும்.

இதில் பதிவு செய்யவலை எனில் பதிவு செய்யவும். உங்களது பான்  ஐடியாக இருக்கும் தற்போது உங்கள் பான்  ஐடி கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு லாகின் செய்து கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து ஒரு பாப் அப் விண்டோ தோன்றும். அதில் பான்  எண்ணை  ஆதாருடன் இணைக்குமாறு கேட்கப்பட்டிருக்கும். அப்படி வரவில்லை எனில் ப்ரோபைல் செட்டிங் சென்று லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Advertisement

தற்போது பான்  கார்டில் உள்ளிட்ட பிறந்த தேதி மற்றும் பாலினம் விவரங்கள் அங்கு காணப்படும். இந்த விவரங்களை உங்களது ஆதார் விவரங்களுடன் பொருத்த வேண்டும். இந்த விவரங்கள் இரண்டு ஆவணங்களிலும் பொருந்தவில்லை என்றால் நீங்கள் தவறாக உள்ளிட்டதை திருத்த வேண்டும். விவரங்கள் பொருந்தினால் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு லிங்க் நவ் என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு பாப்  அப்   செய்தியானது தோன்றும். இது உங்களது பான் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தும். ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த இணைப்பை மேற்கொள்ளாதவர்களின் பான் கார்டு செல்லாது எனவும் அரசு அறிவித்துள்ளது.

Advertisement