சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிபிஐ அதிகாரிகள் அதிரடி!

0
155

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2019 ஆம் வருடம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ், உள்ளிட்டோர் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்து வைத்ததாக தெரிவித்து காவல்துறையினர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கப்பட்டு முதல் நாள் பென்னிக்ஸும், அடுத்த நாள் காலை தந்தை ஜெயராஜும், அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் பெரிதாகி மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கிய சூழ்நிலையில், தற்போது சிபிஐ அதிகாரிகள் அந்த வழக்கை விசாரித்த சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக அந்த சமயத்திலிருந்த ஸ்ரீதர் உட்பட 10 காவல்துறையினரை கைது செய்து மதுரை சிறையிலடைத்தனர் தற்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய சிபிஐ 2027 பக்க குற்றப்பத்திரிக்கையை ஏற்கனவே தாக்கல் செய்தது. இந்த நிலையில், 400 பக்கங்கள் அடங்கிய கூடுதல் குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நீதிபதி நாகலட்சுமி முன்பாக நடந்தபோது சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வியாபாரி ஜெயராஜை சாத்தான்குளம் காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது பதிவான வீடியோ பதிவுகள். சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உள்ளிட்டோரை அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்கள் உடம்பிலிருந்த ரத்தக் கறைகள், இரத்த கரையுடன் கூடிய ஆடைகளை மாற்றியது. போன்ற வீடியோ பதிவுகள் தடையவியல் துறை ஆய்வு போன்ற விவரங்கள் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.