மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

0
151

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.  ( குறள் : 1031 )

உலகம் பல தொழிலை செய்து சுழன்றாலும்
ஏர்த் தொழிலின் பின்னே நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

“உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்றொரு பழமொழி உண்டு. உலகில் எந்த வேலைக்கும் இல்லாத மதிப்பு விவசாயத்திற்கு உண்டு. ஏனெனில் விவசாயம் தனக்காக மட்டுமல்லாது பிற உயிர்களுக்குமான தொழிலாகும். நம் முன்னோர் காலத்தில் இருந்து இன்றுவரை  உழவுக்கு உறுதுணையாக இருக்கும்  காளைகளுக்கும், பசுவிற்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் 700 க்கும் மேற்பட்ட காளைகளும், 935 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையும் அவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 75 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதியுண்டு.

இவ்விழாவின் அவசர மருத்துவ சேவைக்காக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் போட்டியில் களம் இறக்கப்படும். மதுரை, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து காளைகளும், அனுமதி சீட்டு பெற்ற மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

போட்டியில் கலந்து கொள்ளும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களும்  மருத்துவ உடல்தகுதி பரிசோதனைக்கு பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு. போட்டியின் விதிமுறைகளை மீறினால் தகுதி நீக்கம் செய்யப்படும் என்றும் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் பாதுகாப்பிற்காக 1500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
Jayachandiran