மதுரை இளைஞரை பாராட்டிய முதலமைச்சர்!

0
74
மதுரை இளைஞரை பாராட்டிய முதலமைச்சர் !
மதுரை இளைஞரை பாராட்டிய முதலமைச்சர் !

மதுரை இளைஞரை பாராட்டிய முதலமைச்சர்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ (ISRO) கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.  சந்திராயன்-2 உடன் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டு இருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி விக்ரம் லேண்டர்  தரையிறங்கியது. இந்நிகழ்ச்சியை பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பாரத பிரதமர் மோடியும்  பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் லேண்டர் வரும்போது திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது. பின்னர் விக்ரம் லாண்டரி தேடும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில்  நாசாவின் சார்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ள நிலவு புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா இஸ்ரோவிற்கு உதவ முன்வந்தது. விக்ரம் லேண்டர்-ஐ ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பும் என்றும் அதனுடன் சமிக்கை தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் சந்திராயன்-2 விக்ரம் லேண்டர் இந்த பகுதிகளில் இருப்பிடத்தை கண்டறிந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

அமெரிக்காவின் நாசா நிலவைச் சுற்றி ஆய்வு செய்து அவ்வப்போது படங்களை வெளியிட்டு வந்தது இந்த படங்களை ஆராய்ந்த தமிழக பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் நாசாவுக்கு ஒரு ஈ மெயில் அனுப்பினார். அதில் விக்ரம் லேண்டர் இன் சிதைந்த பகுதிகள் என இருப்பிடம் குறித்து தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ஆய்வு செய்த நாசாவும் விக்ரம் லேண்டர் இந்த பகுதிகளில் இருப்பதை கண்டுபிடித்து.

சண்முக சுப்பிரமணியனை இந்தியர்கள் அனைவரும் பாராட்டி வந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், நாசாவின் பாராட்டைப் பெற்ற மதுரையைச் சேர்ந்த பொறியாளர் திரு சண்முகம் சுப்ரமணியன் அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இந்த சந்திப்பின்போது தொழில்துறை முதன்மைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் முதன்மை செயலாளர் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர்.

author avatar
CineDesk