கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

0
90
#image_title

கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கைச் சேர்ந்த தினகரன், விக்னேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “சிங்கம்புணரி தாலுகா, வடக்கு சிங்கம் புணரி பகுதியில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே சிங்கம்புணரி தாலுகாவில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, “சிங்கம்புணரி தாலுகா பகுதியில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் எவ்விதமான கட்டுமான பணிகளும் நடைபெற கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்தில் ஒத்திவைத்தனர்.

author avatar
Savitha