அதிர்ச்சி வழங்கிய தமிழக அரசு! ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு!

0
95

ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது நடைமுறைகள் முடிந்தவுடன் மாலையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு கடந்த 22ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் பல்வேறு நிபந்தனைகளுடன் மட்டுமே அதனை அனுமதிக்கலாம் எனவும் நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை வலியுறுத்தி வந்தனர்.

ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும் அதே அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் எனவும் விடுதலை சிறுத்தைகள் சார்பாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிப்பு உண்டாகலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆகவே ஒரு சில மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்து தமிழக உள்துறைச் செயலாளர் டி ஜி பி மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழ்நாடு முழுவதிலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் ஆர் எஸ் எஸ் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக நீதிபதி இளந்திரையன் முன்பு ஆஜரான ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் கடந்த 22 ஆம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் விதத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், ஆகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மற்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கும் நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். ஆகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதோடு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆகவே அனைவருக்கும் அனுமதி வழங்கிய உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து மனு தாக்கல் செய்ய விருப்பதாகவும் நீதிபதி முன்பு தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதி உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பதிலாக தமிழக அரசு நிராகரித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடலாம் என்று அறிவுறுத்தினார்.

ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிவடைந்த உடன் நாளையே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.