‘எனக்கு இவர்தான் வேண்டும்… ‘ சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைத்த இயக்குனர்

0
103

 ‘எனக்கு இவர்தான் வேண்டும்… ‘ சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைத்த இயக்குனர்

சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் மாவீரன் திரைப்படத்தை மண்டேலா புகழ் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.

மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு சமீபத்தில் வீடியோ வெளியானது. படத்துக்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பெயரில் ரஜினி படம் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள படத்தின் ப்ரமோஷன் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. அதுபோல வில்லனாக மிஷ்கினும், நாயகியாக அதிதி ஷங்கரும் நடிக்கின்றனர். சமீபத்தில் நடந்த பூஜையில் அதிதி இயக்குனர் ஷங்கரோடு கலந்துகொண்டார்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக பரத் ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் மண்டேலா படத்துக்கு இசையமைத்தவர். வேறு எந்த படத்துக்கு இதுவரை இசையமைத்ததில்லை. இந்நிலையில் இரண்டாவது படமே சிவகார்த்திகேயனின் படத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்குக் காரணம் இயக்குனர் மடோன் அஸ்வின் தான் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் பிடிவாதமாக தன்னுடைய முதல் பட இசையமைப்பாளரான பரத் ஷங்கர்தான் வேண்டும் என அடம்பிடித்து அதற்கு சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.