அட வீட்டிலேயே இருங்கப்பா! மத்திய அரசு புதிய ஆலோசனை!

0
72

நாடு முழுவதும் நோய்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் பலரும் மருத்துவமனையில் சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில். தற்போது ஒரு சில குறிப்புகள் போன்றவற்றை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அழுவலகம் தெரிவித்திருக்கிறது. அதாவது லேசான நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருப்பினும் அதனை வீட்டிலிருந்தபடியே சமாளிப்பதற்கான தகவல் மற்றும் குறிப்புகளை அந்த அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.

அதாவது சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாக இந்த நோயின் பாதிப்பை பல மக்களால் வீட்டிலிருந்தபடியே தடுக்க முடியும் என்ற காரணத்தால், நோய்த்தொற்று அறிகுறிகள் எதுவும் ஏற்படுமானால் மக்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது. முதன்முறையாக அறிகுறிகளை கண்டுகொண்டால் மக்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

நோய்த்தொற்று உண்டானால் உடலில் இருக்கின்ற இயற்கையான எதிர்ப்பு சக்தி பாதிப்பை எதிர்த்து போராடும் என்ற காரணத்தால், பொதுமக்கள் நோய்த்தொற்று வந்து விட்டால் கவலை பட வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறது மத்திய அரசு.அதேபோல நோய்த்தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வு எடுப்பது மிகவும் முக்கியம் உடலில் நீர் சத்தை அதிகரிக்க செய்து நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கின்ற ஆக்சிஜனின் அளவு மற்றும் வெப்பநிலை போன்றவற்றை தவறாமல் கண்காணித்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் தொடர்ந்து காய்ச்சல் இருந்தாலோ அல்லது ஆக்சிஜனின் அளவு02 92% கீழ் சென்றாலும் மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டும். நுரையீரலுக்குள் ஆக்சிஜன் செல்லும் அளவை அதிகரிக்க எல்லோரும் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் கர்ப்பிணி பெண்கள், முதுகுத்தண்டு பிரச்சனை உள்ளவர்கள், இதய பிரச்சனை இருப்பவர்கள் இதை பின்பற்ற வேண்டாம் என்றும் அந்த குறிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

அதுபோல இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் இருக்கும் இடத்தில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்து இருக்க வேண்டும். அதோடு இந்த நோய்த்தொற்று பரவலை குறைப்பதற்காக தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் இந்த ஆலோசனை குறிப்பு தெரிவித்திருக்கிறது.மருத்துவ கட்டமைப்புகள் சிறப்பான முறையில் இருக்கும் தமிழ்நாட்டிலேயே நிலைமை மே மாதம் முதல் வாரம் வரை தான் தாக்குப்பிடிக்கும் அதன்பின்னர் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி விடும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

அதேபோல முன்னரே தமிழ்நாட்டில் அடுத்த பத்து நாட்களில் சாதாரண அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகரித்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் 50 சதவீதம் பேர் வீட்டு தனிமையிலும் 30 சதவீதம் பேர் மருத்துவமனையிலும் 10 சதவீதம் பேர் நோய்த்தொற்று பராமரிப்பு மையத்திலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாநிலத்தில் 12168 படுக்கைகள் கூடுதலாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை 3 ஆயிரத்து 379 படிகள் தயார் செய்யப்பட்டிருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

வட இந்தியாவில் தமிழகத்தை விடவும் பல மடங்கு நிலைமை மிக மோசமாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவதை தவிர்க்குமாறு இந்த குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.