குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு!

0
92

குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு!

அரசு பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவி ஒருவரை கணித ஆசிரியர் தகாத வார்த்தைகளில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோர்களுடன் தலைமை ஆசிரியரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் +2 வரை 1500 மாணவிகளுக்கு மேல் படித்து வருகின்றனர். இப்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அரையாண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்து ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.

இதனை அடுத்து இங்கு ஒன்பதாம் வகுப்பில் கணித ஆசிரியராக பணிபுரியும் அனிதா என்ற ஆசிரியர் மதிப்பின் குறைந்த மாணவிகளை பார்த்து குறைந்த மதிப்பெண் எடுத்த நீங்கள் தூக்கு மாட்டி செத்துப் போங்கள்! உங்கள் பிணங்களை உங்களை பெற்றோரிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று மனம் நோகும் வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆசிரியரின் தகாத வார்த்தைகளால் பாதிக்கப்பட்ட மாணவி வீட்டிற்கு சென்றும் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மாணவியிடம் நடந்ததை விசாரித்த பெற்றோர்கள் கோபம் அடைந்து பாதிக்கப்பட்ட மாணவியுடன் உறவினர்கள்  உடன் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் தெரிவித்தனர்.

அதனை எடுத்து தலைமையாசிரியர் கணித ஆசிரியர் மீது துறை ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை எடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

இது பற்றி கணித ஆசிரியர் அனிதாவை சந்தித்து விளக்கம் கேட்டபோது செத்துப் போ என்று கூறியிருப்பேன். குறைந்த மதிப்பெண் எடுத்ததற்கு இதுபோல சொல்லி இருப்பேன். நான் பயங்கரமாக அடிப்பேன். அதேபோல் அரவணைப்பேன் இதையெல்லாம் பெருசாக எடுத்துக்க கூடாது என்று சாதாரணமாக கூறினார். ஆசிரியரின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோரிடம் அது பற்றி விளக்கம் கேட்டபோது நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். இங்கு ஆசிரியர்கள் மாணவிகளின் நடத்தும்விதம் மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி பள்ளி முன்பு போராட்டம் நடத்துவோம் எனக் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here