எக்ஸ் லவ்வருக்கு பாடம் புகட்டிய காதலன்! நடந்த விபரீதம்!

0
78
Lover who taught X Lover a lesson! Disaster happened!
Lover who taught X Lover a lesson! Disaster happened!

எக்ஸ் லவ்வருக்கு பாடம் புகட்டிய காதலன்! நடந்த விபரீதம்!

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பலருக்கு உதவியாக இருந்தாலும் சிலருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.பல்வேறு ஆப் களை இன்ஸ்டால் செய்து ஒன்று அவர்களை அவர்களே துன்பப்படுத்தி கொள்கின்றனர், அல்லது பிறரை துன்புறுத்துகின்றனர்.அந்த வகையில் லாக்டவுன் சமயத்தில் சிறுவயது பையன்கள் பலர் பப்ஜியும், அதை தடை செய்ததை தொடர்ந்து ப்ரீ பையர் போன்ற விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபாடு அடைந்து போதைக்கு அடிமையாவதையும் நாம் பார்த்தோம்.

அதே போல் பெண்களும் இதே ரீதியில் பல துன்பங்களை கடந்து வருகின்றனர்.மேலும் வளர்ந்து வரும் நாகரீக மோகத்தால் ஒருதலை காதலால் பெண்களை கொலை செய்யும் அளவிற்கு கொடூரங்கள் நடைபெறுகின்றன.விருப்பம் தெரிவிக்காத காரணத்தினாலும், காதலித்து வீட்டிற்கு பயந்து கைவிடுவதாலும் அவர்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிக்கின்றன.

இதேபோல் முன்னாள் காதலியை பற்றி அவதூறு செய்திகளையும்,புகைபடங்களையும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.அவரை விசாரித்தபொழுது குஜராத் மாவட்டத்தில் மகிசாகர் என்ற இடத்தில் வசிப்பதாகவும் அவருக்கு வயது 24 என்பதும் தெரிய வந்தது.அவர் பெயர் விர்சிங் டாமர் என்றும், கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டு ,வெட்டியாக ஊர்சுற்றி வந்தவர் என்றும், தெரியவந்தது. மேலும் அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்த நிலையில் அந்த நபரின் நடவடிக்கைகள் எதுவும் அந்த பெண்ணிற்கு பிடிக்காத நிலையில்,அவரை பிரிந்து வேறு ஒரு நபரை மணமுடிக்க எண்ணி உள்ளார்.அதன் காரணமாக அந்த பெண்ணின் வீட்டில் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயமும் முடித்து உள்ளனர்.இந்த விஷயத்தை பற்றி அறிந்து கொண்ட அவரின் முன்னாள் காதலன் டாமர், போலியாக தனது காதலியின் பெயரில்  இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கை தொடங்கியுள்ளார்.

அந்த கணக்கின் மூலம் டாமர் மற்றும் அவரது காதலி சேர்ந்து  எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அந்த போலி கணக்கில் பதிவேற்றி யுள்ளார்.அதே போல் அந்த பெண்ணை திருமணம் செய்யும் மாப்பிளைக்கும் வலைதளத்தின் மூலம் அனுப்பியுள்ளார்.இதே முறையில் அந்த பெண்ணின் உறவினர்களுக்கும் தவறான பல புகைப்படங்களை அனுப்பி உள்ளார்.

மேலும் தொடர்ந்து டாமர் ஐந்து மாதங்களாக அந்த பெண்ணை தொலைபேசியின் மூலம் துன்புறுத்தியதாகவும், ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாகவும், அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தவறான புகைப்படங்களை அனுப்பியதாகவும் தொடர்ந்து செய்த இந்த தொல்லைகளை பற்றி அந்த பெண்ணே முன்வந்து டாமர் மீது புகார் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து போலீசார் டாமரை கைது செய்தனர்.