தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் பல கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கூட்டணி அமைத்துள்ளன. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள், மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட 8 கட்சிகளும் ,அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகளும் இணைந்துள்ளது.

இதையடுத்து வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் திமுக 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என இந்தியா- சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல் கருணாநிதி , ஜெயலலிதா, இல்லாததால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா டிவியும் சிஎன்எக்ஸும் இணைந்து நாடு முழுவதும் 38600 பேரிடம் 193 மக்களவைத் தொகுதிகளில் கருத்துக் கணிப்பை எடுத்துள்ளன.
இந்த கருத்துக் கணிப்பு கடந்த மார்ச் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த கருத்து கணிப்பு முடிவுகளில் ,தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக 16 இடங்களிலும் , அதிமுக 12 இடங்களிலும் , அமமுக மற்றும் பாமக தலா 2 இடங்களிலும் மற்ற கட்சிகள் மீதமுள்ள 8 இடங்களில் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக இந்த தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக மற்றும் திமுக என இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தியது அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளத்து என இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரியவந்தது . ஆனால் தற்போது அது மாறியுள்ளது, அதிமுக தற்போது 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது .இதையடுத்து இந்த கருத்துக் கணிப்பு முடிவு அதிமுக கட்சியினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.