தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!

0
76

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீடிப்பதாக சற்றுமுன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் ஊரடங்கில் தளர்வுகள் எதுவும் இல்லை எனவும் அறிவித்துள்ளார். குறிப்பாக திரையரங்குகள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை தொடர்கிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து தமிழக அரசின் விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும், பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படக்கூடாது என்பதன் காரணமாக தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது அலையை தடுக்க பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.

author avatar
Jayachithra