உள்ளாட்சித் தேர்தல்! அதிமுக கையில் எடுத்த அதே ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்கும் திமுக!

0
108

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது அதிமுக. ஆனால் ஆட்சியை பிடித்து நான்கு மாதங்களிலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.இதனைத் தொடர்ந்து அப்போது அந்தக் கட்சி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இதன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்தது அப்போதைய மாநில அரசு.

இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. ஆனால் அப்போது புதிதாக துவங்கப்பட்ட வேலூர் ,திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, வாணியம்பாடி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு மற்ற பகுதிகளில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து சென்ற சில வாரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கில் தடை செய்யப்பட்டிருக்கின்ற 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடைபெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

இந்த சூழலில், தமிழக ஆளுநராக இருந்து பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்ற பங்களாவில் பன்வாரிலால் அவர்களை நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஜெயக்குமார் உள்ளிட்டோர் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்த சந்திப்பிற்கு பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவரிடம் உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதில் தந்த அவர் சென்ற காலங்களில் உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக தான் நடந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டம் நடந்த சமயத்தில் இதுதொடர்பாக பேசப்படவில்லை. ஒரு கட்டமாக நடத்தலாமா? இரு கட்டமாக நடத்தலாமா? என்று அன்று பேசவே கிடையாது. அப்படி என்றால் இதை ரகசியமாக வைத்து அறிவித்திருக்கிறார்கள் ஒரு இடத்தில் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் இன்னொரு இடத்தில் ஆட்களைக் கொண்டு வந்து கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறினார் ஜெயக்குமார்.

ஒரே மாவட்டத்தில் ஒரு சில ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக அக்டோபர் மாதம் ஆறாம் தேதி அன்றும், மீதம் இருக்கின்ற ஒன்றியங்களுக்கு அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்றும் , தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையில் தமிழக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் உழவர்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக திமுகவைச் சார்ந்த பிரமுகர்களிடம் விசாரணை செய்து சமயத்தில் இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது ஒரே மாவட்டத்தில் ஒரு சில கிலோமீட்டர்கள் இடைவெளியில் இருக்கின்ற பகுதிகளில் கூட இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பது திமுகவிற்கு சாதகமானது தான் 100 சதவீத வெற்றிக்காக தான் இந்த இரு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது என்று சிரித்துக்கொண்டே தெரிவித்து உள்ளார்கள்.