9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு?

0
63

கடந்த 2019 ஆம் வருடம் தமிழகத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பாகவே உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த விட்டபடியால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்து இருந்தது.

அந்த சமயத்தில் மீண்டும் ஒரு முறை அந்த உள்ளாட்சி துறைக்கான அதிகாரிகளின் பதவிக்காலம் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட ஒன்பது மாதங்களுக்கான ஊரக உள்ளாட்சி மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கில் விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் விடுபட்டு இருக்கக்கூடிய ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என கூறியிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றோடு முடிவடைய இருக்கிறது ஆகவே தமிழக மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை ஐந்து மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்து இருக்கிறது. அரும்பாக்கத்தில் இருக்கும் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிகுமார் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.

முன்னதாக திருப்பத்தூர், விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, இராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல், வாக்களிக்கும் நேரம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம் சென்ற ஆறாம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதன் அடிப்படையிலும் ஒரு சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு முன்னால் செப்டம்பர் மாதம் 5ஆம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அறிவாலயத்தில் அந்த கட்சியின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் அவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவும் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டது அதோடு மாவட்டம்தோறும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை பொறுப்பாளராக நியமித்து இருக்கிறது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

உச்சநீதிமன்றம் தெரிவித்த உத்தரவில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கின்ற சூழ்நிலையில்? அந்த கால அளவில் இருந்து சில நாட்கள் கூடுதல் அவகாசம் தமிழக தேர்தல் ஆணையத்தால் கேட்கப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழக தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் அட்டவணை வெளியீடு வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது.