அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வு! ஸ்டாலின் அவசர ஆலோசனை!

0
86

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.

அதன்படி தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது என்று சொல்லப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுற்ற உடன் ஆகஸ்ட் மாதம் தேர்தலை நடத்த இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு உண்டான உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் விதமாக தமிழக அரசியல் கட்சிகள் தற்சமயம் தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணி அளவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என்று தெரிகிறது. அமைச்சர் கே என் நேரு, பெரியகருப்பன் மற்றும் உயரதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.