நடத்த வேண்டும் அதிமுக! வெற்றி வேண்டும் பாமக! நிறுத்த வேண்டும் திமுக

0
90

நடத்த வேண்டும் அதிமுக! வெற்றி வேண்டும் பாமக! நிறுத்த வேண்டும் திமுக

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது,. வார்டு மறுவரை செய்யாமல் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரேயடியாக தேர்தலை நிறுத்திவிட்டு, திமுக ஆட்சிக்கு வந்தால் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற மாயத் தோற்றத்தை திமுக உருவாக்க நினைத்தது,. ஆனால் சுதாரித்துக்கொண்ட அதிமுக உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முனைப்பில் ஒருவழியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராகிவிட்டது,. இனியும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்தால் கட்சியின் தொண்டர்கள் அதிமுகவை விட்டு சென்று விடுவார்கள் என்ற பயம் தற்போது தான் ஆளும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இல்லாததால் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு யாருக்கும் குறிப்பிட்ட சதவீதம் கூட கமிஷன் கொடுக்காமல் தங்கள் வருவாயை கோடிகணக்கில் பெருக்கிக் கொண்டனர்,. இதே நிலைமை நீடித்தால் அதிமுகவின் மூன்றாம் நான்காம் கட்ட தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் பிரதிநிதிகளாக வர வாய்ப்பு இல்லாமல் போனால் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்ற எண்ணம் அதிமுகவினரிடையே இருந்து வருகிறது.

ஆளுங்கட்சியின் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மட்டும் பணம் மற்றும் பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு கடைக்கோடி கட்சி பிரதிநிதிகளை கண்டுகொள்ளாமல் இருந்தால் அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் அகலபாதாளத்துக்கு சென்றுவிடும் என்பது அதிமுகவினரின் புலம்பல் ஆகும்,.

அதேபோல், தற்போது உள்ளாட்சி தேர்தல் நடந்தால் ஆளுங்கட்சியின் அதிகாரம் காரணமாக அதிமுகவினரை எப்படியாவது வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற பயம் திமுகவிற்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது,. இதன் காரணமாகத்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடாது என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது,. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து தேர்தலுக்கு தடை வாங்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. அமைச்சர்கள் தங்கள் அதிகாரம் மூலம் அதிமுகவினரை உள்ளாட்சி பிரதிநிதிகளாக அதிகளவில் வெற்றி பெற வைத்து திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் நன்கு அறிந்திருப்பார்,.

திமுக, உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தடை கேட்டு வழக்கு தொடர்வதை, அதிமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பை தலைவர் ஏற்படுத்திவிட்டார் என்பது திமுகவில் உள்ள தொண்டர்களின் மனக்குமுறல் ஆகும்,. அதுவும் தற்போது திமுக தடை பெற்றுள்ள 9 மாவட்டங்களில் அங்குள்ள திமுக பிரமுகர்கள், தலைமையின் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள உள்ளாட்சி பதவி கூட கிடைக்கவிடாமல் செய்துவிட்டார் என்றும் புலம்பி கொண்டு வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி இத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியிடம் அதிக தொகுதிகளை கேட்டு பெற முடியும் என்ற நிலையில் உள்ளது,. காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் தலித்களுக்கு எதிரான கட்சி என்ற விஷம தோற்றத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுகவும் சேர்ந்து அவதூறு பரப்பியதால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட இழந்தது.

வன்னியர்கள் பலமிக்க இடங்களை கேட்டு அதிக உள்ளாட்சி பிரதிநிதிகளை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பாமக உள்ளது,. ஏற்கனவே இளைஞர்களை பெருமளவில் வைத்துக்கொண்டு செயல்படுவதால் அவர்களின் வளர்ச்சிக்கு வழிவகை ஏற்படுத்த பாமக தலைமை, இளைஞர்களுக்கு தேர்தலில் அதிகளவில் வாய்ப்பு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது,.

எப்படி இருந்தாலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் தான், மக்கள் மத்தியில் இன்றளவும் எழுந்துள்ளது.

author avatar
Parthipan K