கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சரக்கு இலவசம்! அதிரடி அறிவிப்பு

0
69

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சரக்கு இலவசம்! அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் கோரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு குறைந்த நிலையில் அடுத்தடுத்து வெளியான ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு அறிவிக்கப்பட்டு வந்தன. இதனை எடுத்து பொதுமக்களும் தங்களுடைய வழக்கமான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். நாளடைவில் பொதுமக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வெளியில் சென்று வர ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை வருமா என்று சந்தேகத்துடன் இருந்த மக்களுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆரம்ப காலத்தில் இந்த தடுப்பூசி மீது பொதுமக்களுக்கு அச்சம் இருந்தது. நாளடைவில் தடுப்பூசி மீதான அச்சம் குறைந்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

அந்த வகையில் தனியார் அமைப்புகளும் இது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு மதுபானம் இலவசம் என்ற அறிவிப்பையும் ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள குர்கானின் கோல்டு சாலையில் தனியார் உணவகம் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தான் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மதுபானம் வழங்கப்படும் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான அட்டையை எடுத்து சென்று அங்கு காட்டினால் இலவசமாக மதுபானம் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி மீது அச்சத்தில் இருந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ள இந்த உணவகத்தின் அறிவிப்பு மதுபிரியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சரக்கு இலவசம் என்ற இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.