உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கா?

0
151

உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கா?

என்ன தான் மருத்துவ துறை பல்வேறு வளர்ச்சியடைந்தாலும், சில நோய்களுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்ற விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. இந்த லிஸ்ட்டில் சேர்ந்தது தான், உடலில் தோன்றும் கொழுப்புக் கட்டிகள்.

இந்த கட்டிகள் வருவதற்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தோலுக்கும் அதன் அடியிலுள்ள தசையடுக்கிற்கும் இடையில் Adipose Tissue எனப்படும். கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியே Lipoma கட்டியாக உருவெடுக்கிறது. இது உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றும்.

சிறிய அளவில் தோன்றும் இது படிப்படியாக வளரத் துவங்கும் தன்மை கொண்டது. இது புற்று நோய் கட்டியில்லை, அப்படி மாறவும் வாய்ப்பு இல்லை. ஆயினும் LIPOSARCOMA எனும் ஒருவகைக் கொழுப்பு புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது. இது தோலில் அல்லாமல் சற்று ஆழத்தில் கண்களுக்கு தெரியாமல் பதுங்கியிருக்கும். 30 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு வர வாய்ப்பு உள்ளது. அரிதாக சில நேரங்களில் குழந்தைகளுக்கும் வரும்.

மனித உடல் Adipose திசுக்களால் மூடப்பட்டுள்ளது. இது உடலுக்கு வெப்பத்தை, மென்மையை, அழகைத் தருகிறது. தோலின் கீழ் ஒட்டாமல் நழுவிச் செல்வதுபோல் இருப்பது கொழுப்புக் கட்டியின் முக்கிய அடையாளம். இதை தவிர வேறெந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை.

இக்கட்டிகள் உருண்டை வடிவில் அல்லது முட்டை போன்ற நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். சிறிய கட்டிகள் ஒரு செ.மீ. வரை விட்ட அளவு இருக்கும். பெரிய கட்டிகள் சிலரது உடலில் வளரலாம். பொதுவாக தொட்டாலோ, அழுத்திப் பார்த்தாலோ வலி இருக்காது. விதி விலக்காக சில கட்டிகளில் வலி இருக்கலாம். அவை சற்று ரத்த ஓட்டம் அதிகமுள்ள Angio Lipoma எனப்படும் கொழுப்புக் கட்டிகளாகும். எனினும் ஆபத்தானவை அல்ல.

உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றக் கூடிய கொழுப்புக்கட்டியானது, கழுத்துப்பிடரி, தோள், முதுகு, முன் உடல் (Trunk), கைகள், பிருஷ்டம், இடுப்பு, தொடை, வயிறு போன்ற இடங்களில் தோன்றுகிறது. இது தவிர உள்ளுறுப்புகளின் மீது வளரும் கொழுப்புத் கட்டிகள் சற்று ஆபத்தானவை. சில கட்டிகள் பருமனடைந்து, குறிப்பிட்ட நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படும்.

மேலும், இரைப்பை மற்றும் குடல்பாதை மீது கொழுப்புத்திசு கட்டி ஏற்படும் போது, புண், ரத்தப்போக்கு, உணவு விழுங்க முடியாத நிலை (dysphagia), உணவு எதிர்க்களிப்பு, வாந்தி போன்ற பிரச்சினைகள் உருவாக்கலாம். நுரையீரல் காற்றுப் பாதைகளில் கொழுப்புத்திசுக் கட்டிகள் அமையுமானால் சுவாசம் தடைப்படக்கூடும். முதுகெலும்பு மீது ஏற்பட்டால் நிரந்தர அழுத்தம் காரணமாக பல வித சிக்கல்கள் பிறக்கும். இதே போல் பெண்களின் மார்பகங்களிலும், பிறப்புறுப்புகளிலும் உண்டாகும் கொழுப்பு கட்டிகளால் பிரச்சினைகள் ஏற்படும்.

கொழுப்புத் திசுக் கட்டிகள் பல வகைகள் உள்ளன. அவற்றில் பரவலாக பெரும்பாலோரிடம் காணப்படுவது மேலோட்டமான தோலடி கொழுப்புத் திசுக்கட்டி. தோல் புறப்பரப்பின் அடியில் திசுக்களால் ஏற்படும் கட்டி. கொழுப்புத் தேக்கமுள்ள இடங்களில் எல்லாம் இக்கட்டிகள் தோன்ற வாய்ப்புள்ளது. பெரும்பாலும் முன்கையில், தொடையில், முன் உடலில் ஏற்படும்.

Adiposa dolorosa என்பது ஒன்றுக்கு மேல் ஒன்று தோன்றும் கட்டிகள். Intra Muscular Lipoma என்பது கைகால் பெருந்தசைகளின் ஆழத்தில் காணப்படுவது. Chondroid Lipomas என்பது பெண்களின் கால்களில் ஆழமாக ஏற்படும் உறுதியான மஞ்சள் கட்டிகள். Spindle Lipomas எனப்படும் கதிர்செல் கொழுப்புத்திசுக் கட்டி மெதுவாக வளரும் தோலடிக் கட்டி வகையாகும். (Subcutaneous Lipoma) பெரும்பாலும் முதிய ஆண்களிடம் ஏற்படும் கழுத்து, மூக்கு, தோற்பட்டையில் உருவாகும். Neural Fibrolipoma என்பது நரம்புச் சார்ந்த மிகை கொழுப்புத்திசுக் கட்டி ஆகும்.

author avatar
Savitha