அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை!

0
228

அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை!

ட்விட்டரில் பல்வேறு அரசியல் பதிவுகளுக்கு போலீஸ் ட்விட்டர் கணக்கில் இருந்து போட்டிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தற்போது சமூக வலைதளத்தை பல்வேறுத்துறையினரும் பயன்படுத்தி வருகின்றனர். ட்விட்டரில் கோவை மாவட்ட காவல்துறையின் கணக்குகள் @cbedtpolice  என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அதில் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இலச்சினை (லோகோ) ட்விட்டர் கணக்கின் முகப்பு படமாக வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ கணக்கு என்று குறிப்பிடப்படும் இதனை 17.9 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த கணக்கு 2019 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கில் இருந்து தற்போது அரசியல் பதிவுகளுக்கு கடந்து சில மாதங்களாக லைக் போட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வெற்றி கணக்கை துவங்குகிறதா பாஜக?,  என்ற பதிவிற்கும் தமிழ்நாட்டில் காவலர்களுக்கே இந்த நிலை என்றால் மற்ற சாதாரண பெண்களின் கதி? என்ற ஒரு செய்தி தொலைக்காட்சியின் விமர்சன பதிவு போன்றவற்றிற்கும் இந்த பக்கத்தில் இருந்து லைக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாஜக ஐடி மற்றும் சமூக வலைத்தள பிரிவின் தலைவர் நிர்மல் குமாரின் பதிவிற்கு பாஜக மூத்த தலைவர் எச் ராஜா வின் பதிவிற்கும் இந்த பக்கத்தில் இருந்து லைக் போடப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த தகவல்களை குறிப்பிட்டு அதற்கான புகைப்படங்களுடன் பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் முதல்வர் மற்றும் மேற்கு மண்டல காவல்துறை உள்ளிட்டோருக்கு டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை அடுத்து @cbedtpolice  கணக்கு பக்கத்தில் இதுவரை வெளியான எந்த அறிக்கையையும் பார்க்காதவாறு மறைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது சம்பந்தமான விளக்கம் கேட்க மாவட்ட எஸ்பிஐ  தொலைபேசி இணைப்பில் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் இணைப்பில் வரவில்லை. தற்போது இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Previous articleBreaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
Next articleஎன்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு!