ஆரம்பிக்கப் போகும் மழை மக்களே உஷார்!

0
57

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், போன்ற பகுதிகளில் வரட்சியான வானிலையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் லேசாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாளை முதல் வரும் 27ஆம் தேதி வரையில் தமிழ்நாடு ,மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் வறட்சியான வானிலை மட்டுமே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்கள் பனிமூட்டம் நிலவும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.

சென்ற 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் விமான நிலையம் பகுதிகளில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் வெப்பநிலையானது அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 23 செல்சியஸ் ஆகவும் இருந்து வருகிறது.