சிறப்பான பலன்களை கொடுக்கும் எல்ஐசி யின் திட்டம் பற்றி தெரியுமா?

0
80

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி நிறுவனம் தான் எதிர்கால பாதுகாப்பிற்கு பணத்தை சேமிப்பதற்கான கோடிக்கணக்கான இந்தியர்கள் தேர்வு செய்யும் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது.

கடின உழைப்பு மூலமாக ஈட்டிய பணத்தை வேறு முதலீடுகளில் போட்டு ரிஸ்க் எடுப்பதற்கு பலரும் விரும்பாத சூழ்நிலையில், அவர்களுடைய முதன்மையான தேர்வாக இருப்பது எல்ஐசி தான் என்று சொல்லப்படுகிறது.

முதலீடுகளுக்கு பெரிய அளவிலான ஆபத்து எதுவும் இல்லாமல் உத்தரவாதத்துடன் கூடிய பலன்களை வழங்கும் நிறுவனமாக எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. இதன் காரணமாக, இதில் ஏராளமான மக்கள் உடனுக்குடன் பாலிசி எடுக்கிறார்கள். இதனை செய்வதில் வாடிக்கையாளர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நல்ல பலன்களை தரக்கூடியதாக எல்ஐசி பீமா பட்ஜெட் திட்டமிருக்கிறது.

எல் ஐ சி பீமா பட்ஜெட் திட்டம் என்றால் என்ன?

இது சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இரண்டையும் கொண்ட திட்டமாகும். இதில் மிகப்பெரிய தொகையை நீங்கள் ஒற்றை முதலீடாக செய்யலாம்.

பாலிசி கால வரையறையில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வாழ்க்கை பலனுக்காக பணம் செலுத்தப்படுவதுடன் தங்களுக்கும் தங்களுடைய உயிருக்குமான காப்பீடு வழங்குகிறது.

அதோடு மட்டுமல்லாமல் பாலிசி மெச்சூரிட்டி அடையும்போது உங்களுடைய பிரீமியம் மற்றும் லாயல்ட்டி அடிஷன் பலன்கள் உள்ளிட்டவற்றுடன் திரும்பக் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு 3 வருடங்கள் முடிவிலும், 15 சதவீத உத்தரவாத தொகை உங்கள் வாழ்க்கை பலனுக்கான தொகையாக வழங்கப்படுகிறது.

குறைந்தபட்ச உத்திரவாத தொகை மற்றும் தகுதி

இதனை குறைந்தபட்சம் ஒன்பது வருடங்கள் தொடங்கி 12 அல்லது 15 ஆண்டுகள் என எடுத்துக் கொள்ளலாம். 9 வருட பாலிசியில் குறைந்தபட்ச உத்தரவாத தொகை 35 ஆயிரம், 12 பாலிசியில் குறைந்தபட்ச உத்தரவாத தொகை 50,000 ,15 வருடம் பாலிசியில் குறைந்தபட்ச உத்திரவாத தொகை 25 ஆயிரம் என்று வழங்கப்படுகிறது. அதிகபட்ச உத்திரவாத தொகைக்கு வரையறை இல்லை குறைந்தபட்சமாக 15 முதல் 50 வயதுவரையில் இருப்பவர்கள் இதில் இணையலாம் என சொல்லப்படுகிறது.

மெச்சூரிட்டி பலன்கள்

பாலிசி மெச்சூரிட்டி அடையும்போது உங்களுடைய சிங்கிள் பிரிமியம் மற்றும் லாயல்டி அடிசன் பலன்கள் வரி நீங்கலாக திரும்பி கொடுக்கப்படும். இதனை ஒரே தொகையாகவும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது 5, 10 அல்லது 15 ஆண்டுகள் என்ற கால அளவிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இறப்பு பலன்கள்

பாலிசிதாரர் முதல் 5 வருடங்களில் இறந்து விட்டால் அவருடைய குடும்பத்திற்கு முழுமையான உத்தரவாத தொகை வழங்கப்படும். அதுவே ஐந்து வருடங்களுக்கு பிறகு உயிரிழந்தால் முழுமையான உத்தரவாத தொகை மற்றும் லாயல்டி அடிசன் உள்ளிட்டவை பீமா பட்ஜெட் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும்.