பென்ஷன் வாங்குகிறீர்களா? எல்ஐசி வெளியிட்ட புதிய பாலிசி விவரம்! இனி ஒரே கூத்து தான் போங்க!

0
64

இன்றைய உலகில் ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள்.

இதற்காக முறையாகவும், சீராகவும், சேமிக்க வேண்டும் என்று பலர் ஆசைப்பட்டு வருகிறார்கள். அதேபோல சேமிப்பு தான் எதிர்கால பிரச்சனைகளை சமாளிக்க கூடிய உறுதியை வழங்குகிறது என்பதால் இது அனைவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனைக் கருத்தில் வைத்து எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்கள் பலவிதமான திட்டங்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றன. அந்த விதத்தில், எல்ஐசி தற்போது புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

கடந்த 5ம் தேதி இந்த புதிய திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தனிநபர் ஓய்வூதிய திட்டமானது முறையான மற்றும் ஒழுக்கமான சேமிப்பின் மூலமாக ஒரு நல்ல தொகையை எதிர்காலத்துக்கு சேர்த்து வைக்க இயலும். இதில் வழக்கமான பிரீமியம் செலுத்தும் தேர்வு அல்லது ஒரு முறை மட்டும் செலுத்தும் பிரிமியம் தேர்வும், இருக்கிறது.

இதில் பாலிசிதாரர்கள் தாங்கள் செலுத்த விரும்பும் பிரிமியம் தொகையை தேர்ந்தெடுக்க கூடிய விருப்பமும் இருக்கிறது. குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பிரிமியம் வரம்புகள், பாலிசி கால அளவு மற்றும் வயதுக்கு ஏற்ற பாலிசி காலத்தை தேர்ந்தெடுக்கும் விருப்பமும், இதிலிருக்கிறது.

சில நிபந்தனைகளுக்குட்பட்டு பாலிசிதாரர்கள் அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் பாலிசிக்கான கால அளவை நீட்டித்துக் கொள்ளலாம்.

நான்கு வெவ்வேறு வகையான பண்டுகளில் பிரிமியங்களை முதலீடு செய்வதற்கான வசதியும் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது. அதோடு பாலிசிதாரரிடம் அவர்கள் செலுத்தும் ஒவ்வொரு உரிமை தீர்க்கும் பிரிமியம் ஒதுக்கீடு கட்டணம் வசூலிக்கப்படும்.

இதில் மீதமுள்ள தொகை ஒதுக்கீடு விகிதம் என குறிப்பிடப்படுகிறது. இது பாலிசிதாரர் தேர்ந்தெடுத்த நிதியின் யூனிட் களை வாங்க பயன்படும் பிரீமியத்தின் பகுதியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒருவர் பிரிமியம் திட்டங்களை முகவரி மூலமாகவோ அல்லது எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றோ வாங்கிக் கொள்ளலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமானது, 5,53,721.92 லட்சம் கோடி மதிப்புள்ள சந்தை மதிப்பீட்டினடிப்படையில்,5வது பெரிய நிறுவனமாக உயர்ந்தது. எல்ஐசியின் பங்குகள் செவ்வாய்க்கிழமையன்று 8.61% இருந்தது.

அதோடு ஒரு பங்கிற்கு 867.20 என்ற பங்குகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலமாக எல்ஐசி எந்தளவிற்கு இந்தியாவில் மிக முக்கிய சேமிப்பு நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இந்த நிறுவனம் நடுத்தர மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வர உதவி புரியக்கூடிய ஒரு மைய புள்ளியாகவும், இருந்து வருகிறது. அதேபோல இறுதி காலத்தை எண்ணி கவலை இன்றி வாழவும் எல்ஐசி பெரிய அளவில் உதவி புரிகிறது என்றே சொல்லலாம்.