துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள்!

0
80
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமானம் வந்து சேர்வதில் இருந்து வந்த காலர்தாமதம் விலகும்.

குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அந்யோனியம் நிலவும். விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் கேட்டிருந்த உதவிகள் கண்டிப்பாக இன்றைய தினம் கிடைக்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் நல்ல முன்னேற்றத்துடன் காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியம் சீராகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் நன்மை தரும் நாளாக உங்களுக்கு அமையும்.

author avatar
CineDesk