Connect with us

Astrology

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்!

Published

on

Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். அஷ்டம ராசியில் சந்திர பகவான் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.

Advertisement

குடும்ப உறவுகளில் சிறுசிறு பிரச்சனைகள் எழலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் எழலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவுகள் மூலம் சில பிரச்சனைகள் எழலாம்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் சிறு சிறு அலைச்சல்கள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம்.

Advertisement

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் வந்த சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று காலத் தாமதம் ஆகிறதே என்ற எரிச்சலுடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் வேண்டுமென்றால் கடுமையாக பாடுபட வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Advertisement

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Advertisement