ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விவாகரத்து ! லெஸ்பியன்களே முன்னிலை !

0
83

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விவாகரத்து ! லெஸ்பியன்களே முன்னிலை !

ஓரினச்சேர்க்கை அங்கிகரிக்கப்பட்டுள்ள நெதர்லாந்து நாட்டில் அதுபற்றிய புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான அவமதிப்புகள் குறைந்து அவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் பழக்கம் அதிகமாகியுள்ளது. ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்னதாக மேற்கு நாடுகளில் அவர்களுக்கு திருமண செய்து கொள்ளும் உரிமை வரைக் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நெதர்லாந்து நாட்டில் 2001 ஆம் ஆண்டு முதல் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதை அறுவித்த முதல் சில வருடங்களில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகளவில்  திருமணங்கள் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அதன் பின் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் அதிகமானது. 20 வருடங்களில் லெஸ்பியன் எனப்படும் பெண் ஓரினச்சேர்க்கை தம்பதிகள் அதிகளவில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

திருமணங்கள் போலவே விவாகரத்துகளும் நடைபெற்று வருகின்றன. விவாகரத்திலும் பெண் ஓரினச்சேர்க்கைத் திருமணங்கள் ஆண்களை விட அதிகளவில் விவாகரத்தில் முடிகின்றன.

100 ஓரினச்சேர்க்கைத் செய்தால் அதில்  18 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இந்த விவாகரத்துகளில் முதன்மைக் காரணமாக அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொள்ளுதே முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் 20 வயதுக்கு முன்னதாக திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளும் 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளும் அதிகளவில் விவாகரத்து செய்துகொள்கின்றனர்.

author avatar
Parthipan K