சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் நாள்!!

0
161
#image_title

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் நாள். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நல்ல செய்திகள் கிடைத்து சந்தோஷமாக காணப்படுவார்கள். சமூக அந்தஸ்துகளில் இருக்கும் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும் என்பதால் அமைதியாக இருக்க வேண்டும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஒவ்வொரு விஷயங்களும் அருமையாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் அருமையாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு தொடர்புகள் விரிவடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani