சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் அலைச்சலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள்!!

0
142
#image_title

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் அலைச்சலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் அலைச்சலும் மாலையில் மன மகிழ்வும் உண்டாகும் நாள். காலையில் வரக்கூடிய அலைச்சல் உங்களுக்கு ஆதாயமான அலைச்சலாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் வந்து சேரும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது நல்லது.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் மற்றும் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கல்வியில் கவனமாக செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு அலைச்சல் தரும் செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani