சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

0
146
#image_title

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். ராசிக்கு உள்ளையே சந்திர பகவான் இருப்பதால் குழப்பங்கள் வந்து சேரும் ஆகையால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடம் ஒற்றுமை குறையும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபரி ஆகலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காக்க வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு வித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சரபேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani