சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
46

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் சிறு சிறு முன்கோபங்கள் அதிகரிக்கும் என்பதால் சங்கடங்கள் உருவாகும் ஆகையால் சற்று கவனமாக இருப்பது நல்லது. வாகன பயணங்களில் எச்சரிக்கை வேண்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் கவனமாக நடந்து கொள்ளவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சுமையும் வீண் அலைச்சலும் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இன்னல்கள் வந்து சேரும் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண அரும்பாடு படுவார்கள். அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பது நல்லது. கலை துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமுடன் செயல்படவும். உறவினர்கள் நண்பர்கள் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வந்து தருவார்கள். கடுக்காய் வாங்கல் நன்றாக இருக்கும் என்றாலும் புதிய முதலீடுகளை தயவு செய்து இன்றைய தினம் தவிர்த்தல் நல்லது. காதலர்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடலில் ஒரு வித சோர்வு வந்து நீங்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani