முதல்வரை பாராட்டிய முன்னணி நடிகர்!

0
98

பழங்குடியின மக்களின் இல்லம் தேடி சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி இருப்பது வெறும் பட்டா அல்ல புதிய நம்பிக்கை என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில்வசித்து வந்து கொண்டு இருக்கக்கூடிய நரிக்குறவர், இருளர், இன மக்கள் மிக நீண்ட காலமாக தங்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, அதோடு சாதிச்சான்று, போன்றவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள். இந்த கோரிக்கைகள் எல்லாம் அவருடைய சமூகத்தைச் சார்ந்த பெண் அஸ்வினி என்பவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டுசெல்லப்பட்டு நேற்றைய தினம் பூஞ்சேரியில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த சுமார் 282 நபர்களுக்கு 4.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.

அதேபோல இரண்டு மாத காலத்திற்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்த பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உத்தரவிட்டு இருக்கிறேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், நடிகர் சூர்யா தன்னுடைய வலைத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடியின மக்களின் இல்லம் தேடி சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி இருப்பது வெறும் பட்டா மட்டும் இல்லை புதிய நம்பிக்கை கால, காலமாக தொடர்ந்து வரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை வழங்கி இருக்கிறது. அதோடு எளிய மக்களின் தேவை அறிந்து உடனடியாக செயலில் இறங்கிய வேகம் உங்களை பிரமிக்க வைத்திருக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்க முடியாத சில நாளாக மாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி என தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

அதேபோல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, எண்ணற்ற இருளர் மற்றும் நரிக்குறவர் குடும்பங்களுக்கு பட்டாக்கள், சாதி சான்றிதழ்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய மானியங்களை விநியோகம் செய்தது மனித குலத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்திருக்கிறார். அதோடு உங்களுடைய செயல்கள் நம் அரசியல் அமைப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டாக்கி இருக்கிறது என கூறி இருக்கிறார்
.

முதலில் இருந்து இறுதிவரையில் நாம் இந்தியர்கள் என்ற அம்பேத்கரின் நம்பிக்கையை உண்மையாக்கி இருப்பதற்கு நன்றி. ஒரு குடிமகள் என்ற முறையில் மட்டுமல்லாமல் தியா மற்றும் தேவ் உள்ளிட்டோரின் தாயாகவும் உங்களுடைய நிர்வாகம் மற்றும் உடனடி நடவடிக்கைகளுக்காக உங்களுக்கு முழுமனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் இருளர் பழங்குடி இன மக்களுக்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகவியல் பிரச்சினைகள் தொடர்பாக பேசும் ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியானது இதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சூர்யாவிற்கு பாராட்டு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.