கமல் மீது வழக்கா? பிக் பாஸால் வந்த சோதனை!

0
116

 கமல் மீது வழக்கா? பிக் பாஸால் வந்த சோதனை!

கொரோனா தொற்றானது 2019ஆம் ஆண்டு சீன நாட்டில் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.அந்த வகையில் தொற்று ,இந்தியாவை பெருமளவு பாதித்தது இத்தொற்றின் முதல் அலையில் இந்தியாவிற்கு சொல்லும்படியான தாக்கம் ஏற்படவில்லை.அதே இரண்டாம் அலையின்போது கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர்.மேலும் பல அரசியல்வாதிகள் , சினிமா பிரபலங்கள் தொற்றால் தங்கள் உயிரை இழந்தனர்.அந்த வரிசையில் பாடகர் எஸ் பி பி என ஆரம்பித்து தற்பொழுது நடன இயக்குனர் சிவசங்கர் பாபா முதல் இத்தொற்றுக்குக்கு பலியாகியுள்ளனர்.

அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தொற்றானது உருமாற்றம் அடைந்து தொடர்ந்து மக்களுக்கு மேலும் பாதிப்பைத் தருகிறது. அந்த வகையில் முதலில் டெல்டா வகை கொரானாவாக உருமாறியது. அதனையடுத்து தற்பொழுது ஒமைக்ரான் வைரஸ் ஆக உருமாறியுள்ளது. தற்பொழுது வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா திரும்பும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளிநாடு பயணம் சென்றார். அவ்வாறு அவர் வெளிநாடு பயணம் முடித்துவிட்டு இந்தியா வந்தடைந்தார்.

வெளிநாட்டில் இருந்து வந்த உடன் கமல்ஹாசனுக்கு இரும்பல் ,காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருந்து வந்துள்ளது. தனக்கு கரோனா ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தில் சென்னையில் உள்ள போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மாதம் 22ஆம் தேதி கமல்ஹாசன் அவர்கள் கரோனா சோதனை எடுத்தார். அவ்வாறு எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் முடிவு வெளிவந்தது.அதைத் தொடர்ந்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவர் ஒரு வாரத்திற்கும் மேல் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற ஷோவை நடத்திவந்தார். இவர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இவரால் அந்த நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. அதனால் இவர் வர இயலாத அந்த வாரம் மட்டும் இவருக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் ஷோவை நடத்தினார். தற்பொழுது ஒரு வராம் சிகிச்சை முடிந்து தொற்றும் பாதிப்பிலிருந்து கமல்ஹாசன் வெளி வந்துள்ளார். அவ்வாறு தொற்றிலிருந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் தனது இல்லத்தில் குறைந்தபட்சம் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

ஆனால் கமல்ஹாசன் அவ்வாறு தனிமையில் இல்லாமல் தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு மீண்டும் எடுத்து நடத்தினார். இதனால் பல தரப்பிடம் இருந்து கேள்விகள் எழுந்தது. தொற்று குணமாகி தற்போதுதான் வந்துள்ளார் உடனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டுமா என்று பலர் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கமல்ஹாசனிடம் இது குறித்து கேள்வி கேட்கப்படும் என்று தற்பொழுது கூறியுள்ளார்.

மேலும் பொது நிகழ்ச்சியில் ,தொற்று பாதிப்பில் இருந்து வெளிவந்தவுடன் எவ்வாறு கலந்துகொண்டார் என்பது குறித்த விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனா தொற்று பரவும் வகையில் இவர் நடந்து கொண்டுள்ளார் என இவர் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசி வருகிறது. மேலும் ஒரு சிலர் தமிழக அரசின் டார்கெட் தற்போது கமல்ஹாசன் மீது திரும்புகிறது என்றும் கூறுகின்றனர்.