வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை! பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ?

0
69
Laughter at the White House! Would this be the case if the Prime Minister and the Chancellor were together?
Laughter at the White House! Would this be the case if the Prime Minister and the Chancellor were together?

வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை! பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ?

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பின்னர் இந்தியா உடனான தனது தொடர்பு குறித்து பல விஷயங்களை  பேசினார்கள். இதற்காக பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்து, நகைச்சுவையாகவும் பேசினார். அவர் அப்போது கடந்த 1972 ஆம் ஆண்டு எனது இருபத்தி ஒன்பதாவது வயதில் முதன்முறையாக செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

அப்போது மும்பையிலிருந்து பைடன் என்ற பெயரில் எனக்கு ஒருவர் வாழ்த்து அனுப்பி இருந்தார். ஆனால் அதை நான் அப்படியே விட்டுவிட்டேன். அதன்பிறகு இந்தியாவில் 5 பைடன்கள் வசித்து வருவதாக மறுநாள் காலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் என்னிடம் தெரிவித்தனர். ஏற்கனவே கிழக்கிந்திய தேயிலை கம்பெனியிலும் ஒருவர் ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் கேப்டன் இருந்துள்ளார்.

மேலும் அவர் ஒரு அயர்லாந்துகாரர் என்பதையும் என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. எப்படி இருந்தாலும் எனது இந்திய தொடர்பு குறித்து இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இந்த சந்திப்பின் நோக்கம் அனைத்தும் எனது இந்தியா உடனான தொடர்பை கண்டுபிடிப்பதற்கு உதவும் என்று கூறினார்.

இவ்வாறு அவர் கூறியது தான் தாமதம் பிரதமர் உட்பட அங்கே இருந்த பலரும் பலமாக சிரித்தனர். அதற்கு பின் பிரதமர் அதற்கு மறுமொழியாக இந்தியாவில் உங்களின் குடும்ப பெயர் இருப்பது பற்றி நீங்கள் என்னிடம் பலமுறை விரிவாக கூறியிருக்கிறீர்கள். எனவே இது குறித்த ஆவணங்களை திரட்டுவதற்காக நான் பல வேட்டைகளை நிகழ்த்தி உள்ளேன். எனவே அதன் பலனாக சில ஆவணங்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன். இவை உங்களுக்கு உதவி புரியலாம் என்று கூறினார். இதைக் கேட்டதும் அங்கே சிரிப்பலை மேலும் அதிகரித்தது.