காலையில் பேட்டி, மாலையில் முதல்வர் சந்திப்பு: என்ன நடக்குது ரஜினி வீட்டில்?

காலையில் பேட்டி, மாலையில் முதல்வர் சந்திப்பு: என்ன நடக்குது ரஜினி வீட்டில்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை கமல்ஹாசன் வீட்டில் நடந்த கே பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி கொண்டிருந்த நிலையில் திடீரென ரஜினிகாந்த் அளித்த பேட்டியால் ஊடகங்கள் பரபரப்பு அடைந்தன.

முதலில் பேட்டி கொடுத்த ரஜினிகாந்த் அதன் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்ததால் இன்று முழுவதும் ரஜினிகாந்த் செய்திகளே முன்னணி ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்தது

குறிப்பாக இந்த பேட்டியில் அவர் ’தான் பாஜகவின் காவி நிறத்தில் சிக்க மாட்டேன் என்றும் தமிழகத்தில் இன்னும் ஆளுமை உள்ள தலைவர் இல்லாமல் வெற்றிடமாக இருப்பதாகவும் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரையும் அவர் ஆளுமையுள்ள தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த பேட்டி எடுத்துக் காட்டியது

இந்த நிலையில் காலையில் முதல்வரை விமர்சனம் செய்தது ரஜினிகாந்த் பேட்டி அளித்த நிலையில் மாலையில் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று இரு தரப்பிலும் கூறப்படுகிறது

இருப்பினும் இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. தலைமைச் செயலக வட்டாரங்கள் இதுகுறித்து கூறிய போது ’லதா ரஜினிகாந்த அவர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய பதவியை அளிக்க உள்ளதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் ஓரிரண்டு நாட்களில் தெரிந்துவிடும்

Copy
WhatsApp chat