‘வாரிசு’ படத்தின் க்ளைமேக்சில் ரசிகர்களுக்கு இப்படியொரு டுவிஸ்ட் காத்திருக்கிறதா ?

0
130

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படம் வெளியாவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ரசிகர்களிடையே இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமெங்கும் பல திரையரங்குகளை ‘வாரிசு’ படம் கைப்பற்றியுள்ளது, தமன் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா, குஷ்பூ, ஜெயசுதா, சங்கீதா, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 90களில் விஜய் நடிப்பில் வெளியான படங்களை போன்று ‘வாரிசு’ படமும் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமையும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இப்படம் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி மற்றும் சென்டிமெண்ட் நிறைந்த கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை கண்கலங்க செய்யும் அளவிற்கு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் சண்டை காட்சிகளுக்கு திலீப் சுப்பராயன் தான் பயிற்றுநராக இருக்கிறார், விஜய்யை சிறப்பாக காட்ட திலீப் சுப்பராயன் கடுமையாக போராடியுள்ளார். ‘வாரிசு’ படத்தின் இடைவேளை மற்றும் க்ளைமேக்ஸ் காட்சியில் வரக்கூடிய சண்டை ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

author avatar
Savitha