34 ஆயிரம் ரூபாய் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

0
84

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கின்ற பல் மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பை கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வெளியிட்டு இருக்கிறது. தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி- பல் மருத்துவ அலுவலர், பல் மருத்துவ உதவியாளர்.

ஊதியம்- பல் மருத்துவ அலுவலர் ரூபாய் 34,000 பல் மருத்துவ உதவியாளர் 13, 800

கல்வி தகுதி- பல் மருத்துவர் அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்சமாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பிடிஎஸ் பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு தமிழ்நாடு டென்டல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு – 35க்குள் இருக்க வேண்டும்

மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட சரியான விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவைப்படும் அறிவிக்கப்பட்ட எல்லா சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 5-12- 2022 அன்று மாலை 5 மணிக்குள் பந்தய சாலையில் இருக்கின்ற துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம்.

இந்தப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 2ம் தேதி காலை 10 மணி அளவில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.