இயற்கையை காப்பாற்ற கடைசி வாய்ப்பு! உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

0
100

இயற்கையை காப்பாற்ற கடைசி வாய்ப்பு! உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

நம் வருங்கால சந்ததினர்களுக்கு சுத்தமான குடிநீரும், சுத்தமான காற்றும் கிடைக்கப் பெறுவதற்கான ஒரு முயற்சி. நம் தாய் தந்தையை  போல நமது இயற்கையையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும்.எனவே இந்த பதிவினை உங்களால் முடிந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பிர்கள் என்ற நம்பிக்கையில் இதனைப் பதிவிடுகிறோம்.

EIA 2020 draft

வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட EIA Act-ல் பல தளர்வுகள் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. EIA Act-ன் முழு விவரம் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

https://bit.ly/3fa82kE

EIA  தளர்வுகளினால் எந்தவகையான நிறுவனமும் எந்தவித அனுமதி இன்றியும் ஒரு பகுதியில் ஆரம்பிக்க முடியும்.இதனால் கண்டிப்பாக நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் உயரும். ஆனால் நம் இயற்கைக்கு பேரழிவு ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.விரிவாக சொல்லப் போனால் EIA 2020 தளர்வுகளால் எங்குவேண்டுமானாலும் நிலக்கரி சுரங்கம் போன்ற சுரங்க சாலைகளை அமைத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது,இதுபோன்று பல கெமிக்கலை வெளியேற்றும் மருந்து நிறுவனங்கள் அனைத்திற்கும் எந்த விதமான சான்றிதழ் இல்லாமல் நிறுவனங்களை தொடங்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்புதல்கோரியுள்ளது.
இதுபோன்ற தளர்களினால் இந்தியாவின் மலைகள் குடையப்படம், காடுகள் அழிக்கப்படும் நீர் நிலைகள் மாசுபடும் காற்று மாசுபடும்,நம் வருங்கால சந்ததியினர்கள் வாழ வழியின்றி போகும் நிலை ஏற்படும்.

இந்திய அரசாங்கம் தற்போது அளித்துள்ள இந்த தளர்வானது இயற்கை வளங்களுக்கு எதிராக பொருளாதாரத்தை மட்டும் உயர்த்தும் நோக்கில் உள்ளது.
நம் நாட்டின் பொருளாதாரம் மட்டும் உயர வேண்டுமா? அல்லது இயற்கை வளமும் பாதுகாக்கப்பட்டு பொருளாதாரம் உயர  வேண்டுமா?என்பதனை தீர்மானிக்கும் நிலையில் தற்போது உள்ளோம்.

இந்த சட்டதின் தளர்வுகளை தடுப்பதற்கு நம் கையில் இன்னும் 15 நாட்களே உள்ளன.அரசாங்கம் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வருகின்ற ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை அனுமதியளித்துள்ளது.நம் இயற்கை வளங்களை காப்பாற்ற நினைக்கும் மக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கின் மூலம் உங்கள் புகாரினை பதிவு செய்யலாம்.

உங்கள் புகாரினை தெரிவிக்க உங்களின் பெயர் மற்றும் email id
– யே போதுமானதாகும்.தயவு செய்து உங்கள் புகார்களை பதிவு செய்த பிறகு மற்றவர்களுக்கு இதனை ஷேர் செய்யுங்கள்,நம் இயற்கையை காப்பாற்ற நம் கையில் இருக்கும் கடைசி வாய்ப்பு.

http://chng.it/tM66qc6s

இந்தலிங்க்கை கிளிக் செய்து Signin petition option-யை click செய்யவும் பின்னர் உங்களின் பெயர் மற்று இமெயில் id -யை டைப் செய்து Submit கூடுக்கவும்.பின்பு Share this petition option-யை click செய்து உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு Share செய்யவும்.

author avatar
Pavithra