பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம்! மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்!
ஒரு நிலத்தை இன்னொருவரிடம் இருந்து வாங்கும்போது அதில் வில்லங்கம் இல்லாமல் மோசடியை தவிர்த்து நிலம் வாங்குவது எப்படி என்பதற்கு இணையத்தின் மூலம் ஒரு எளிய வழி உள்ளது.
நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரம் மிக முக்கியமான ஒன்று. உண்மையை போலவே போலி பத்திரங்களை உருவாக்கி வைத்து ஏமாற்றும் மோசடி பேர்வரிகளும் உண்டு. இதுபோன்ற தவறான நபர்களிடம் இருந்து உண்மையான தகவல்களை பெற வேண்டும் எனில் நில உரிமையாளர்களின் பக்கத்து வீட்டார் அல்லது பக்கத்து நில உரிமையாளர் ஆகியோரிடம் சந்தேகத்திற்காக விசாரிப்பது பழைய வழக்கம் ஆகும்.
நேரில் சென்று பார்த்து போலி பத்திரத்தின் மூலம் ஏமாறுவதை தடுக்க அரசின் சார்பிலும் சரியான நடவடிக்கை எடுத்த பின்னும் சில இடங்களில் போலியான மோசடி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இனி யாரிடமும் ஏமாறாமல் இருக்க இணையத்தின் மூலம் உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது.
ஒருவரின் பத்திரம் உண்மையானதுதானா.? அது அவர்களின் பெயரில்தான் இருக்கிறதா என்பதை அறிய இனி கண்டபடி அலையத் தேவையில்லை. அதனை எளிதில் கண்டறியும் வகையிலும், அதற்கான முழுவிவர இணைய முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான மூன்று தகவல்களை பதிந்தால் உங்களுக்கான உண்மைத் தகவல் கிடைக்கும். முதலில் சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், பத்திரம் எண், பதிவு செய்த வருடம் ஆகிய மூன்றையும் சரியாக பதிவு செய்தால் பத்திரம் குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும்.
அந்த பத்திரம் யார் பெயரில் இருக்கிறது. ஏமாற்றம் குறித்து கவலை கொள்ளத் தேவை இல்லை. தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது நிலம் உங்கள் பெயரில் இருக்கிறதா என்பதையும் இந்த இணையதள முகவரியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி: http://ecview.tnreginet.net/