பெண்களே உஷார் அழகு கிரீமால் வந்த ஆபத்து!  3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு 

0
167

பெண்களே உஷார் அழகு சாதன கிரீமால் வந்த ஆபத்து!  3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு 

அழகு சாதன கிரீம் பூசி வந்த மூன்று பெண்களுக்கு உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பொதுவாக பெண்கள் மற்றும் இளம் பெண்கள் உடல் மற்றும் முகத்தை பொலிவாக காட்டவும் அழகுப்படுத்திக் கொள்ளவும் அழகு சாதன கிரீம் பூசி கொள்வது வழக்கம். இந்த பழக்கம் தற்போது பெரும்பாலான பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதேபோல் மும்பையைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை அழகு படுத்திக் கொள்ள அழகு கலை நிபுணரை நாடினார். அவரும் அந்தப் பெண் முகத்தில் பூசிக்கொள்ள கிரீம் ஒன்றை அளித்துள்ளார். அதை வாங்கி தினமும் பூசி வந்த அந்தப் பெண் அழகாக தோற்றமளித்தார்.

இதையடுத்து அந்தப் பெண் அழகாக மாறியதை கண்ட பெண்ணின் தாயாரும் சகோதரியும் அந்த கிரீமை உபயோகப்படுத்த தொடங்கினர். நாளடைவில் அழகாக மாறிவந்த அவர்கள் பின்னர் பெருமளவில் உடல் நல பாதிப்புக்கு ஆளானார்கள். கிரீன் பூச தொடங்கி நான்கு மாதங்கள் கழித்து அவர்களுக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டன. அவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது  தெரிய வந்துள்ளது. அடுத்து அவர்கள் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களின் சிறுநீரகம் பாதிப்படைந்ததற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி அறிய சோதனைகள் நடத்தினர்.

சோதனையின் முடிவில் பெண்களின் ரத்தத்தில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருந்ததை கண்டறிந்தனர். பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் பாதரசத்தின் அளவு 7-க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மூவரின் ரத்தத்தில் பாதரசத்தின் அளவு 46க்கும் அதிகமாக இருந்தது. இதனால்தான் இவர்கள் மூன்று பேரின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டது என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

பின்னர் மூன்று பெண்களின் உடலில் பாதரசம் எவ்வாறு கலந்தது என்பதை கண்டறிய பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன அதில் அந்த பெண்கள் பூசிய முக கிரின் மீது மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த கிரீமை பரிசோதித்த போது அதில் அளவுக்கு அதிகமாக பாதரசம் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பொதுவாக க்ரீம்களில் பாதரசத்தின் அளவு 1-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

ஆனால் அந்தப் பெண்கள் பயன்படுத்திய முககீரிம்களில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருந்ததும் ஆரம்பத்தில் பாதரசம் ரத்தத்தில் கலந்து முகத்தை பொலிவாக்குவது போல் காட்டினாலும் பின்னர் சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.